மல்லிப்பட்டினத்தில் 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு ~ இயந்திரக் கோளாறால் வெகு நேரம் வரிசையில் காத்திருந்த மக்கள் ..!!

மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக தமிழகம் உட்பட பல மாநிலங்களில் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மல்லிப்பட்டினத்தில் இன்று காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது.இங்கு அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இரு பள்ளிகளிலும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள  101 வது வார்டில் இயந்திரக் கோளாரால் ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது. இந்த நாள் மக்கள் வெகு நேரம் வரிசையில் காத்திருந்தனர்.

Post a Comment

Previous Post Next Post