தமிழகத்தில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கிய நிலையில், தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்குப்பதிவு செய்ய பொதுமக்கள் ஆயத்தமாயினர். அதன்படி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கோயம்பேட்டில் குவிந்தனர். மாலை 6 மணி முதல் கோயம்பேட்டில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கத்தொடங்கியது. போதுமான பேருந்துகள் இல்லாததால், பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லமுடியாமல் அவதியடைந்தனர். நீண்ட காத்திருப்புக்குப்பின் ஆத்திரமடைந்த அவர்கள் இரவு 12 மணி அளவில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பேருந்து எங்கே என்று கேட்டதற்கு அவர்களை கோயம்பேடு போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
ஓட்டுப்போட கிளம்பியாச்சு .! ஆனா.. இன்னும் ஊருக்கு வரல .! கோயம்பேட்டில் நடந்த அட்டூழியம் ..!!
Mallinews
0

Post a Comment