சிறுமி ஹாசினியை சீரழித்து கொண்ட தஷ்வந்த்திற்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை இடைக்கால ரத்து ..!!

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது

சென்னை மாங்காடு அடுத்த மவுலிவாக்கம் பகுதியில் வசித்து வந்த 6 வயது சிறுமி ஹாசினி கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், அதே பகுதியில் வசித்த தஷ்வந்த் என்பவர் சிறுமியை கொலை செய்ததை கண்டுபிடித்ததுடன், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தஷ்வந்த் குற்றவாளி என்று கூறி தூக்கு தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து தஷ்வந்த் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தூக்கு தண்டனையை உறுதி செய்தது. இந்த தீர்ப்பையும் எதிர்த்து, தஷ்வந்த் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post