தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் தமுமுக-மமக கிளை சந்திப்பு மற்றும ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.
மல்லப்பட்டினம் கிளை தலைவர் செய்யது புகாரி வரவேற்புரை நிகழ்த்தினார்.சிறப்பு அழைப்பாளராக மமகவின் மாநில துணை பொதுச்செயலாளர் தஞ்சை பாதுஷா கலந்துக்கொண்டு தமுமுக கடந்து வந்த பாதை,அரசியலில் மமக சாதித்தவை குறித்து சிறப்புரை நிகழ்த்தினார்.
தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் அப்துல் மாலிக்,பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சாகுல் ஹமீது,முகமது இல்யாஸ்,மதுக்கூர் ஃபவாஸ்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் சமுதாய பணிகள் மேற்கொள்ள தமுமுக-மமகவில் புதியதாக பலர் தங்களை இணைத்துக் கொண்டனர். மேலும் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன,மல்லிப்பட்டினம் கிளையின் அடுத்தடுத்த பணிகள் குறித்தும் மமக கிளை செயலாளர் அப்துல் ஹமீது எடுத்துரைத்தார்.
அதிராம்பட்டினம் நகர நிர்வாகிகள், மல்லிப்பட்டினம் கிளை நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.





Post a Comment