அத்து மீறும் காவல்துறை மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேற்றம் ,NHRC ன் மாவட்ட தலைவர் கண்டனம்..!!

அத்துமீறும் காவல் துறை

*முகக்கவசம் அணியாத காரணத்தால்  காயல்பட்டினம் இளைஞரை கொடூரமாக தாக்கிய ஆறுமுகநேரி காவல்துறையினர்! - சிறுநீரகம் செயலிழந்து டயாலிஸில் செய்யும் அவலம்!*

*தேசிய மனித உரிமைகள் கவுன்சில் ஆஃப் இந்தியா - ன் தஞ்சை மாவட்ட தலைவர் கடும் கண்டனம்! - நீதி விசாரணைக்கு கோரிக்கை!*

இதுதொடர்பாக NHRC ன் 
தஞ்சை மாவட்ட  தலைவர் SRK.அசன் முகைதீன்.B.A  அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

 காயல்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மீது நிகழ்த்தப்பட்ட மனித உரிமைக்கு எதிரான தாக்குதல் காரணமாக, அவர் இன்று மிகவும் பரிதாபகரமான முறையில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். காவல்துறையின் மனிதத் தன்மையற்ற இந்த தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த 32 வயது ஹபீப் முகமது என்பவர் கடந்த ஜூன்.09 அன்று  காயல்பட்டினம் குத்துக்கல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாட்டு பகுதி வழியாகவும், முகக்கவசம் அணியாமலும் சென்ற காரணத்திற்காக, ஹபீப் முகமது ஆறுமுகநேரி காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு கடுமையான முறையில் சித்திரவதை தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

மருத்துவ மனைக்கு  வந்த காவல்துறையினர் ஹபீப் முகமது குடும்பத்தினரை மிரட்டி  மருத்துவ உதவி கிடைக்கச் செய்யாத சூழலை உருவாக்கியுள்ளனர். தொடர்ந்து  சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் செல்ல 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்ட நிலையில், காவல்துறையினரின் நிர்பந்தத்தினால் ஹபீப் முகமதுவை அழைத்துச் செல்லாமல் ஆம்புலன்ஸ்  திரும்பி சென்றுள்ளது.

சாத்தான்குளம் சம்பவமும், ஆறுமுகநேரி காவல்நிலைய சம்பவமும் கொரோனா நடவடிக்கை பேரில் காவல் அதிகாரிகள் மேற்கொண்ட அடாவடி அதிகார திமிராக கானப்படுகிறது.

 மனித உரிமைக்கு எதிரான மிருகத்தனமான தாக்குதலை தொடுத்த காரணத்தால், சாத்தான்குளத்தில் அப்பாவிகள் இருவரின் உயிரைப் பறித்துள்ளனர். அதேபோல் காயல்பட்டினத்தில் அப்பாவி ஒருவரை நடைபிணமாக்கியுள்ளனர்.

ஆகவே, தாக்குதல் தொடர்பாக தமிழக அரசு வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். தாக்குதலில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் சாந்தி, துணை ஆய்வாளர் சரவணன் மற்றும் 3 காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட இளைஞர் ஹபீப் முகமதுவின் அனைத்துவிதமான மருத்துவச் செலவுகளையும் அரசே ஏற்பதோடு, இழப்பீடு வழங்க வேண்டும் என  தமிழக அரசை தேசிய மனித உரிமைகள் கவுன்சில் ஆஃப் இந்தியா (NHRC OF INDIA) கேட்டுக்கொள்கின்றது.

*SRK அசன் முகைதீன்.BA*
*தேசிய மனித உரிமைகள் கவுன்சில் ஆஃப் இந்தியா (NHRC OF INDIA) தஞ்சை மாவட்ட தலைவர்*

Post a Comment

Previous Post Next Post