தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் முக்கியமானவர் தான் நடிகர் விஜயகாந்த். பல ஹிட் படங்களை கொடுத்த இவர் தற்போது அரசியல் கட்சி தொடங்கி அதில் தலைமை வகித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக விஜயகாந்தின் உடல் மோசமான நிலைக்கு சென்று வருகிறது. சமீபத்தில் கூட மூச்சு விட முடியாமல் அவதிப்பட்ட காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இவருக்கு விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது எல்லோருக்கும் தெரியும். இவர்கள் இருவரும் தற்போது சினிமா ஒரு பக்கம் அரசியல் ஒரு பக்கமும் இருந்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் குறித்து முக்கியமான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது அமெரிக்க பிரபல பாப் இசை பாடகர் 50 சென்ட் உடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளனர். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது...
Post a Comment