அதிராம்பட்டினம் நகராட்சிக்கு ரூ3. 5 கோடியில் புதிய கட்டிடம்.!




அதிராம்பட்டினம் நகராட்சிக்கு
ரூ. 3. 5 கோடியில் புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டுவிழா நடந்தது.
அதிராம்பட்டினம் நகராட்சிக்கு புதிய நகராட்சி கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து அதிராம்பட்டினம் கடற்கரை காவல் நிலையம் மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு எதிரே உள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ரூ. 3. 50 கோடியில் நகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் நகராட்சி தலைவர் தாஹிரா அம்மாள் அப்துல் கரீம் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நட்டினார். நிகழ்ச்சியில் துணைத்தலைவர் ராமகுணசேகரன், நகராட்சி ஆணையர் சித்ரா சோனியா, பட்டுக்கோட்டை நகராட்சி பொறியாளர் குமார், செயற்குழு உறுப்பினர் அப்துல்ஹலீம் மற்றும் அனைத்து நகர் மன்ற உறுப்பினர்கள், அனைத்து ஐமாத்தார்கள், அனைத்து கிராம பஞ்சாயத்தர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



Post a Comment

Previous Post Next Post