விழுப்புரம் விக்கிரவாண்டி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி காலமானார்.!




விழுப்புரம் விக்கிரவாண்டி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி காலமானார்


ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி. சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் புகழேந்திக்கு முதலுதவி செய்தனர்.

தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று இரவு விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி. சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.

இதற்காக வேட்பாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் முன்னதாக வருகை தந்து முதலமைச்சர் வருகைக்கு காத்திருந்தனர். நேற்று முன்தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி வந்திருந்தார். காத்திருப்போர் அறையில் அமர்ந்திருந்த அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்த அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் புகழேந்திக்கு முதலுதவி செய்தனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி விக்கிரவாண்டி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி இன்று காலமானார்.

Post a Comment

Previous Post Next Post