மல்லிப்பட்டினத்தில் கடலில் காணாமல் போன மீனவரின் குடும்பத்தினரை சந்தித்து மீன்வளத்துறை மற்றும் ஓம்கார் ஃபவுண்டேசன் நிவாரணம் வழங்கி ஆறுதல்.!

 



தஞ்சை மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி,மல்லிப்பட்டினத்தில் கடந்த வாரம் பைபர் படகில் நான்கு பேர் மீன்பிடிக்க சென்ற படகு கவிழ்ந்து நீரில் மூழ்கியது, இதில் மூவர் காப்பற்றப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டனர்.

அந்தோணி என்பவர் மட்டும் மீனவர்கள்,மீன்வளத்துறை அதிகாரிகள் தேடியும் கிடைக்கவில்லை,இதனால் மிகுந்த சோகத்தில் குடும்பம் மூழ்கியது.இந்நிலையில் அவர்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் அரிசி ஆகியவற்றை வழங்கி  மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் ஓம்கார் ஃபவுண்டேஷன் ஆறுதல் கூறினார்.இந்நிகழ்வில் மீன்வளத்துறை அதிகாரிகள், ஓம்கார் ஃபவுண்டேஷன் நிர்வாகிகள் ஆகியோர் வழங்கினர்.

Post a Comment

Previous Post Next Post