தஞ்சை மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி,மல்லிப்பட்டினத்தில் கடந்த வாரம் பைபர் படகில் நான்கு பேர் மீன்பிடிக்க சென்ற படகு கவிழ்ந்து நீரில் மூழ்கியது, இதில் மூவர் காப்பற்றப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டனர்.
அந்தோணி என்பவர் மட்டும் மீனவர்கள்,மீன்வளத்துறை அதிகாரிகள் தேடியும் கிடைக்கவில்லை,இதனால் மிகுந்த சோகத்தில் குடும்பம் மூழ்கியது.இந்நிலையில் அவர்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் அரிசி ஆகியவற்றை வழங்கி மஜக மாவட்ட செயலாளர் அதிரை சேக் ஆறுதல் கூறினார்.இந்நிகழ்வில் மல்லிப்பட்டினம் கிளை செயலாளர் ராபிக் முகமது மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

Post a Comment