தஞ்சை மாவட்டம் மல்லிபட்டினம் மீனவ கிராமத்தில் 10 நாட்களுக்கு முன்பு கடலுக்கு 4 மீனவர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மூவர் கரை திரும்பிவிட்டனர், அந்தோனிராஜ் என்ற ஒருவர் மட்டும் இதுவரை மீட்கபடவில்லை.
கடற்கரை காவல்துறை, மீனவ அதிகாரிகளிடம் புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
1கை குழந்தை உட்பட 3 குழந்தைகளுடன் மிகுந்த சிரமத்தில் குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். அன்றாட வாழ்க்கை நகர்த்த மிகுந்த சிரமபட்டு வரும் அக் குடும்பத்தை இன்று மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட தலைவர் மதுக்கூர் ஃபவாஸ், தமுமுக மாவட்ட செயலாளர் அதிரை அப்துல் மாலிக், மமக மாவட்ட செயலாளர் மல்லிப்பட்டினம் ஃபஹத்,மாவட்ட துனை செயலாளர் புரோஸ்கான், மல்லிபட்டினம் கிளை தலைவர் செய்யது புஹாரி மற்றும் அதிரை, மதுக்கூர், மல்லிபட்டினம் நிர்வாகிகள் நேரில் சந்தித்து நிவாரண பொருட்கள் கொடுத்துவிட்டு, பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது அதில் "படகு கவிழ்ந்து விபத்தில் 10 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது, மீட்பதற்கான முயற்சியை அரசு விரைவுபடுத்த வேண்டும் எனவும், அந்தோனி ராஜ் குடும்பத்திற்கு தேவையான நிவாரண உதவியை அரசு உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் எனவும் மாவட்ட தலைவர் ஃபவாஸ் பேட்டி அளித்தார்."
தேவையான உதவிகளையும், அரசின் நிவாரணம் கிடைக்கவும் மனிதநேய மக்கள் கட்சி தொடர் முயற்சி எடுக்கும் என குடும்பத்திற்கு உறுதியளித்தனர்.




Post a Comment