மல்லிப்பட்டினத்தில் கடலுக்கு சென்ற மீனவரை கண்டுபிடித்து தரக்கோரி SDPI கட்சியினரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு.!

 



தஞ்சை மாவட்டம் மல்லிபட்டினம் மீனவ கிராமத்தில் 10 நாட்களுக்கு முன்பு கடலுக்கு 4 மீனவர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மூவர் கரை திரும்பிவிட்டனர், அந்தோனிராஜ் என்ற ஒருவர் மட்டும் இதுவரை மீட்கபடவில்லை.

காணாமல் போன கணவரின் நிலை தெரியாமல் தவித்து  வருகின்றனர்.

இந்நிலையில்  குடும்பத்தினரை இன்று SDPI கட்சி மல்லிப்பட்டினம் நகர மாவட்ட நிர்வாகிகள், நேரில் சந்திந்தனர்.

சந்திப்பின் போது அக்குடும்பத்தினர் காணாமல் போன அந்தோனி என்ற நபரை மீட்டு தரக்கோரி கோரிக்கை மனு  அளித்தனர்.

இச்சந்திப்பில்  மல்லிபட்டினம் SDPI கட்சி நகர தலைவர் ஜவாஹிர்,நகர துனைத்தலைவர் நிஜாமுதீன். மற்றும் நகர கிளை நிர்வாகிகள்  நேரில் சந்திந்து  நிவாரன பொருட்கள் வழங்கி 

இச்சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க முடிவெடுக்கபட்டுள்ளது.



Post a Comment

Previous Post Next Post