தஞ்சை மாவட்டம்,பேராவூரணி அருகே கஞ்சா கடத்திய 3 பேரை காவல்துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலத்திலிருந்து இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக கண்டெய்னர் லாரியில் கொண்டுவரப்பட்ட 330 கஞ்சா பொட்டலங்களை முடச்சிக்காடு அருகே கடந்த நவம்பர் 22ஆம் தேதி கைப்பற்றப்பட்டது.
இதுதொடர்பாக தென்காசி மாவட்டம் முத்தையா மகன் பெரமுராஜ்(வயது 34),சேதுபாவாசத்திரம் காரங்குடாவை சேர்ந்த அண்ணாதுரை(44),அம்மணிசத்திரத்தை சேர்ந்த முத்தையா(60) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பரிந்துரையின் பேரில் இவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டார்.இதனையடுத்து மூவரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Post a Comment