தமிழ்நாடு விசைப்படகு மீனவர் நல சங்கத்தின் மாநிலச் செயலாளர். Ak. தாஜுதீன் அவர்கள் மாநில மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது,
"கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள படகுகளுக்கு அரசு அறிவித்திருந்த நிவாரணத்தொகை போதாது என்றும், அதை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்."
"கஜா புயலால் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம், ஆகிய பகுதிகளில் 191 விசைப்படகுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாகவும்,55 விசைப்படகுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் அரசால் கணக்கிடப்பட்டுள்ளது.இதில் முற்றிலும் சேதம் அடைந்துள்ள படகுகளுக்கு ரூபாய் 5 லட்சமும் பகுதியளவு சேதமடைந்துள்ள படகுகளுக்கு ரூபாய் 3 லட்சமும் அரசால் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது இது 14 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட அரசாணையின்படி இந்த நிவாரணத் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது தற்போது ஒரு படகு மட்டுமே ரூபாய் 30 லட்சம் முதல் 40 லட்சம் வரை செலவு ஆவதாகவும்,அரசு அறிவித்திருந்த நிவாரண தொகை ரூபாய் 5 லட்சம் படகுடைய இன்ஞ்சின் வாங்குவதற்கு மட்டுமே போதாது என்றும் அவர் கூறியுள்ளார்". மேலும் அவர் $ இது அரசுக்கு தெரியாதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்."
மேலும், "இவற்றில் சில படகுகள் மண்ணில் புதைந்து கிடப்பதால் அதை மீட்பதற்காக ஆகும், செலவையும் அரசே ஏற்க வேண்டும்"என கூறியுள்ளார்.
"புதிதாக கட்டப்பட்டு வரும் மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் தூண்டில் வளைவு அமைத்து தருவதன் மூலம் படகுகளை இயற்கை சீற்றத்திலிருந்து தவிர்க்கலாம் எனவும் அவர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்".
மேலும் அவர் உடனடியாக அரசு நிவாரணத் தொகையை உயர்த்தி, அது அவருடைய வங்கிக் கணக்கிலேயே நேரடியாக செலுத்த வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
Post a Comment