மத்திய,, பிரதேசம் தேர்தல் களம் ..!!
தொகுதி எண்ணிக்கை நிலவரங்கள்..
மொத்தம் 230
காங்கிரஸ் -114
பிஜேபி -109
பகுஜன் சமாஜ்வாதி- 2
சமாஜ்வாதி -1
மற்றவை-4
ஆட்சியமைக்க பெரும்பான்மை தொகுதிகள் 116 இடங்கள் தேவைப்படும் நிலையில்,பகுஜன் சமாஜ்வாதி கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏக்களும், சுயேட்சை எம்எல்ஏக்களில் ஒரு சிலரும் ஆதரவு தெரிவித்துள்ளதால் மத்திய பிரதேசத்தில் பெரும்பான்மை தொகுதிகளுடன் ஆட்சியை அமைக்கிறது காங்கிரஸ்.
இந்நிலையில், காங்., கட்சி ஆட்சி அமைத்தால், முதல்வர் பதவிக்கு, கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, கமல்நாத் மற்றும் காங்., தலைவர் ராகுலின் நெருங்கிய நண்பரான ஜோதிராதித்யா சிந்தியா இடையில் போட்டி நிலவுகிறது. கமல்நாத்தும், ஜோதிராதித்யாவும், மாநில தேர்தல் பணிகளில் சிறப்பாக செயல்பட்டனர்.
இந்நிலையில், கமல்நாத் ஆதரவாளர்கள், அவரை முதல்வராக சித்தரித்து, நேற்று,
மாநிலத்தின் பல பகுதிகளில் போஸ்டர் ஓட்டியிருந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து, ஜோதிராதித்யா சிந்தியாவிடம் கேட்டபோது, ''முதல்வர் யார் என்பதை, கட்சி மேலிடம் முடிவு செய்யும். முழு முடிவும் வெளியாகும் வரை காத்திருப்போம்,'' என்றார்.
Post a Comment