வாரத்தின் சிறந்த தினம் வெள்ளிக்கிழமை - கின்னஸ் நிர்வாகம்...!

 



வாரத்தின் சிறந்த தினம் வெள்ளிக் கிழமை என அறிவித்துள்ளது கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்.

கடந்த அக்டோபர் 17 அன்று கின்னஸ் உலக சாதனைகள் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் "திங்கட்கிழமையை வாரத்தின் மோசமான நாள் என நாங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறோம்" என பதிவிடப்பட்டிருந்தது.

இந்த பதிவிற்கு ஆதரவாக கமன்ட் செக்ஷனில் நெட்டிசன்கள் கருத்துகளை தெறிக்கவிட்டனர்.

இந்நிலையில், தற்போது அந்த ட்வீட்டை ரீட்வீட் செய்த கின்னஸ் சாதனைகள் பக்கம், வாரத்தின் சிறந்த நாள் ஆக வெள்ளிக் கிழமையை தேர்வு செய்துள்ளது.


ட்வீட்டில், வெள்ளிக் கிழமையை வாரத்தின் சிறந்த தினமாக மாற்றுகிறது" என தலைப்பிடப்பட்டிருந்தது.

பள்ளிக்கூடம், கல்லூரி, வேலைக்கு செல்பவர்கள் என, உலகளவில் மக்களுக்கு திங்கள் கிழமை என்பது விரும்பத்தகாத நாளாக தான் இருக்கிறது. வாரத்தின் துவக்கமே நமக்கு சாதகமாக அமையாவிட்டால், வாரம் முழுவதும் அலுப்பும் சோர்வும் இருக்கும், நம் மன நிலையும் பாதிக்கும் என்பது பரவலான கருத்து.

திங்கள் வந்தாலே வெள்ளி கிழமை எப்போது வரும், இரண்டு நாட்கள் விடுமுறை எப்போது என தான் பெரும்பாலும் மக்கள் சிந்திக்கின்றனர். நண்பர்களை சந்திப்பது, வெளியில் செல்வது, குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பது, நல்ல உறக்கம், பிடித்தவற்றை சாப்பிடுவது என மனதை இளக செய்யும் விஷயங்களை செய்யவே வார இறுதியை நோக்கி காத்திருக்கின்றனர்.


இஸ்லாம் :

” நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும். அன்று தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள்; அன்றுதான் சொர்க்கத்திற்குள் அனுப்பப் பட்டார்கள்; அன்றுதான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அன்றுதான் யுக முடிவு நிகழும்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்லிம் 1548)

Post a Comment

Previous Post Next Post