கஜாவில் மண் கரையை கடந்த படகுகள் ... மீண்டும் கடற்கரையை கடக்குமா மல்லிப்பட்டினத்தில் மீன் தொழில் சிறக்குமா ..!!

கஜா புயல் ... கடந்த வருடம் நவம்பர் மாதம் 15 ஆம் தேதி தமிழகத்தில் வீசிய கஜா புயல் டெல்டா மாவட்டங்களையே நிலைகுலையச் செய்தது. டெல்டா மாவட்டம்  தனது வாழ்வாதாரத்தை இழந்து நிர்கதியாய் நிற்கிறது.முக்கிய தொழில்களான தென்னை மரங்களும் ,மீன்பிடித்தொழிலும் கடுமையான சேதத்தை சந்தித்தது. தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. படகுகளோ முற்றிலும் தரைதட்டி சின்னாபின்னமானது. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம் மல்லிப்பட்டினத்தில் மிகப் பெரிய துறைமுகம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது . மல்லிப்பட்டினத்தில் வீசிய கஜாவின் கோர தாண்டவத்தால் கரையில் இருந்த பல படகுகள் சின்னாபின்னமானது. சில படகுகள் அருகிலுள்ள புதுப்பட்டினத்தில் தரைதட்டி தரைத்தளத்திற்கு வந்தது. அரசுகளும் நிவாரணங்களை அறிவித்த வண்ணமே இருக்கின்றன.ஆனால், மக்களுக்கு இன்னும் நிவாரணம் முழுமையாக வந்தடையவில்லை . மக்களோ அரசு அறிவித்த நிவாரணத்தை நம்பி படகுகளை அப்புறப்படுத்தி சரி செய்யும் வேலையை ஆரம்பித்துவிட்டார்கள். எனவே, அரசு அறிவித்த நிவாரணம் உடனடியாக மக்களை வந்தடைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். மல்லிப்பட்டினம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களில் படகுகளை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதே நிலையில் இன்னும் சில படகுகள் அப்புறப்படுத்தப்படாமல் கஜாவில் கடந்த நிலையிலேயே கிடக்கிறது





. விரைவில் அனைத்து படகுகளும் சரிசெய்யப்பட்டு முன்பு இருந்தது போலவே மல்லிப்பட்டினத்தில் மீன்பிடித் தொழில் வளம் பெருக அனைவரும் ஏக இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.

Post a Comment

Previous Post Next Post