தினமும் ஒரு மருத்துவ தகவல்

வெப்பமண்டல நாடுகளில் உடல் சூடுஇயல்பாகவே அதிகமாகக்காணப்படும். இதனால் உடலானதுபலவகையான இன்னல்களைச்சந்திக்க நேரிடும்.    இதனால் தான் நம்முன்னோர்கள் உடல்          சூட்டைத்தணிக்க சுரைக்காயை உணவில்அதிகம் சேர்த்து வந்துள்ளனர்.சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில்உணவில் சேர்த்து வந்தால்       உடல்சூடு தணியும்,வெப்ப நோய்கள் ஏதும்ஏற்படாது.

சிறுநீர் பெருக :
மனித உடலில் உள்ள தேவையற்றவியர்வை, சிறுநீர் வழியாகவெளியேறும். சிறுநீரகமானதுஇரத்தத்தில் உள்ள இரசாயனத்தாதுக்களைப் பிரித்துவெளியேற்றுகிறது. சில சமயங்களில்              இவை வெளியேறாமல் மீண்டும்இரத்தத்தால் உறிஞ்சப்பட்டு உடல்பலவகையான இன்னல்களைச்சந்திக்க நேரிடுகிறது. இந்தநிலையைப் போக்கி சிறுநீர் நன்குவெளியேற சுரைக்காய் சிறந்தமருந்தாக விளங்குகிறது.

பித்தத்தைக் குறைக்க :
உணவு மாறுபாட்டாலும், மனஅழுத்தத்தாலும் உடலினைஇயக்குகின்ற வாத, பித்த, கபத்தில்பித்தத்தின் நிலை அதிகரிக்கும்போது                

 உடல் பலவீனமடைந்துபல நோய்களின் தாக்குதலுக்குஆளாக நேரிடும். இந்த பித்தத்தைக்குறைக்க சுரைக்காய் சிறந்தமருந்தாகும்.
சுரைக்காயை மதிய உணவுடன்சேர்த்து அருந்தி வந்தால் பித்தம்சமநிலை அடையும்.

சுரைக்காய் நரம்புகளுக்குபுத்துணர்வைக் கொடுத்து, உடலைவலுப்படுத்தும்.
பெண்களுக்கு உண்டாகும்சோகையைப் போக்கும், இரத்தத்தைச்சுத்தப்படுத்தும்.
  
குடல் புண்ணை ஆற்றும், மூலநோய்உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்தமருந்து.
சுரைக்காயின் சதையை சிதைத்துஉடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்துகுளித்து வந்தால் உடல் எரிச்சல்குறையும். சுரைக்காயைச் சுட்டுசாம்பலாக்கி தேனில் குழைத்துசாப்பிட்டு வந்தால் கண்நோய் தீரும்.

சுரையின் இலைகளை நீரிலிட்டுஊறவைத்து அந்த நீரைப் பருகிவந்தால் வீக்கம், பெருவயிறு,நீர்க்கட்டு நீங்கும். காமாலைநோய்க்கும் பயன்படுத்தலாம்.
சுரைக்காய்

♦ நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் விரும்பிய உணவு
அனஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
தையற்காரர் ஒருவர் நபி ﷺ அன்னவர்களை தாம் தயாரித்திருந்த உணவி(னை உண்பத)ற்காக அழைத்தார். நானும் நபி ﷺ அன்னவர்களுடன் சென்றேன். அவர் வாற்கோதுமை ரொட்டியையும், சுரைக்காயையும் உப்புக்கண்டமும் இருந்த குழம்பையும் நபி ﷺ அவர்களின் முன்னால் வைத்தார். நபி ﷺ அன்னவர்கள் உணவுத் தட்டின் நாலா பாகங்களிலும் சுரைக்காயைத் தேடுவதை பார்த்தேன். அன்றிலிருந்து நானும் சுரைக்காயை விரும்பி(ச் சாப்பிட்டு)க் கொண்டே இருக்கிறேன்.
நூல் - ஸஹீஹுல் புஹாரி - பாகம் 7 : அத்தியாயம் 65 : எண் 347
♦ மூத்திர கோளாறுகள் நீங்க
சுரைக்காய் சிறுநீரை நன்கு வெளிப்படுத்தும். மேலும் மூத்திரக் கோளாறுகளை நீக்கும்.

Post a Comment

Previous Post Next Post