கனரா பேங்கில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு.!!

பொதுத் துறை வங்கிகளில் தனி முத்திரை பதிக்கும் கனரா வங்கி, தனது சேமிப்புக் கணக்கு வட்டி விகிதங்களை மாற்றியமைத்துள்ளது. வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, புதிய விகிதங்கள் அக்டோபர் 21, 2022 முதல் அமலுக்கு வந்துள்ளன. மாற்றத்திற்குப் பிறகு, கனரா வங்கி இப்போது சேமிப்பு வங்கிக் கணக்குகளுக்கு 4% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. வங்கி கணக்கில் சராசரி மாத இருப்பு தொகை (நகர்ப்புறம், நகர்ப்புற மற்றும் மெட்ரோ பகுதிகளில் உள்ள கிளைகளுக்கு ரூ. 1000) மற்றும் ( கிராமப்புறங்களில் உள்ள கிளைகளுக்கு ரூ. 500) ஆகும். கனரா வங்கி இப்போது ரூ.50 லட்சத்துக்கு குறைவான நிலுவை தொகை கொண்ட சேமிப்பு கணக்குகளுக்கு 2.90% வட்டி விகிதத்தை வழங்குகிறது. 50 லட்சம் முதல் ரூ. 5 கோடி நிலுவை தொகை கொண்ட கணக்குகளுக்கு கனரா வங்கி இப்போதுரூ. 2.95% வட்டி விகிதங்களை வழங்குகிறது. அதே போல் 5 கோடி முதல் ரூ. 10 கோடி நிலுவை தொகை கொண்ட கணக்குகளுக்கு 3.05% வட்டி வழங்கப்படுகிறது. நிலுவை தொகை ரூ. 100 கோடி முதல் ரூ 500 கோடி வரை உள்ள கணக்குகளுக்கு வழங்கப்படும் வட்டி 3.10% ஆகும். ரூ. 500 கோடி முதல் ரூ 1000 கோடிக்கு குறைவான நிலுவை தொகை கொண்ட கணக்குகளுக்கு வட்டி விகிதம் 3.40% வழங்கப்படுகிரது. கனரா வங்கி தற்போது அதிகப்பட்சமாக சேமிப்பு கணக்குகளுக்கு 4% வரை வட்டியை மாற்றியமைத்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post