உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரின் தற்போது நடைபெற்ற வரும் நிலையில் சமீப காலமாக உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை காண 50 ஜிபி டேட்டா இலவசம் என்று ஒரு செய்தி சமூகவலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது. அதனைக் குறிப்பிட்ட நபர்களுக்கு ஷேர் செய்தால் உங்களுக்கு 50 ஜிபி டேட்டா இலவசம் என அதில் குறிப்பிடப்பட்டிருப்பதால் பலரும் இதனை நம்பி அந்தச் செய்தியை வெகுவாக பரப்பி வருகிறார்கள்.
இந்நிலையில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை காண 50 ஜிபி டேட்டா இலவசம் என்று வரும் லிங்கை ஓபன் செய்ய வேண்டாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். 50 ஜிபி டேட்டா தருவதாக கூறும் ஆசைவார்த்தைகளை நம்பி, எந்த இணைப்பையும் கிளிக் செய்யாதீர்கள் என்றூம் அவ்வாறு செய்தால் உங்கள் செல்போன் ஹேக் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக பொதுமக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Post a Comment