பெண்களுக்கு காங்கிரஸ் ஐந்து வாக்குறுதிகள்.!

 


நாடாளுமன்ற தேர்தலுக்கான பெண்களுக்கான காங்கிரஸ் கட்சியின் ஐந்து முக்கிய வாக்குறுதிகள் 

1. நாட்டில் உள்ள ஏழ்மையான குடும்பங்களில் உள்ள பெண் ஒருவருக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

2. மத்திய அரசு பணியிடங்களில் புதிதாக நிரப்பப்படும் பணிகளில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

 3. அங்கன்வாடி,  ஆஷா  மற்றும் மதிய உணவு பணியாளர்களின் மாத ஊதியத்தில் மத்திய அரசின் பங்களிப்பு இரட்டிப்பாக்கி வழங்கப்படும்.

4. பெண்களுக்கான கல்வியை உறுதி செய்யவும் பெண்களின் சட்டப்பூர்வ உரிமைகளை அமல்படுத்துவதில் அவர்களுக்கு உதவுவதற்கு ஒவ்வொரு பஞ்சாயத்திலும் அதிகாரி நியமனம் செய்யப்படுவார்.

5. நாட்டில் பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகள் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும். அதன்படி நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் மத்திய அரசு சார்பில் பெண்கள் விடுதி அமைக்கப்படும். இந்தத் திட்டத்திற்கு சுதந்திரப் போராட்ட வீராங்கனை சாவித்திரி பூலே அவர்களது பெயர் வைக்கப்படும்

Post a Comment

Previous Post Next Post