தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தெருமுனை பிரச்சாரம் இன்று மல்லிப்பட்டினத்தில் நடைபெற்றது:

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மல்லிப்பட்டினம் கிளை சார்பாக இன்று மல்லிப்பட்டினத்தில் முக்கிய இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இத்தெருமுனை  பிரச்சாரத்தில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் "அல் குரான்" மாநாடு ஏன் என்பது பற்றியும் , "இணைவைப்பு பெரும்பாவம்"என்பது பற்றியும் மக்களிடத்தில் தெளிவாக விளக்கப்பட்டது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட பேச்சாளர் முகமது அஷ்ரப் அவர்கள் மக்களிடையே இதை பற்றி எடுத்துரைத்தார்.

அதை தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 21.ஜனவரி.2019 அன்று விழுப்புரத்தில் ஏற்பாடு செய்துள்ள "அல் குரான்" மாநாட்டிற்கும் அழைப்பு விடப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post