தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினம் சமுதாய நலமன்ற நிர்வாகிகள் சரபேந்திர்ராஜன்பட்டிணம் ஊராட்சிக்கு தேவையான கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.
இன்று(அக்.27) தஞ்சையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மல்லிப்பட்டினம் பகுதிக்கு நிரந்தர குப்பைக்கிடங்கு, தேவையான மருத்துவமனை, கிழக்கு கடற்கரை சாலையில் கழிப்பிட கட்டடம்,ஊர் முழுவதும் குப்பை தொட்டிகள் வைத்து குப்பைகள் அள்ள வேண்டும்,ஊரில் உள்ள குளங்களை தூர் வாரிட வேண்டும்,நியாய விலைக்கடை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை சந்தித்து அளித்தனர்.
மேலும் மன்ற செயல்பாடுகள்,சேவைகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.இச்சந்திப்பில் சமுதாயநல மன்ற தலைவர் சகாப்தீன்,செயலாளர் அப்துர் ரஹ்மான்,துணைத்தலைவர் ஜலீல் முகைதீன்,நிறுவனர் முகமது ரஃபி மற்றும் முன்னாள் கவுன்சிலர் வஹாப் ஆகியோர் இருந்தனர்.
Post a Comment