"சேதுபாவாசத்திரத்தில் பெரும் தீவிபத்து – மளிகை, பழக்கடை சாம்பல்.!

 



தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரத்தில் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட தீவிபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அப்பகுதியில் இயங்கி வந்த மளிகை கடை மற்றும் அருகிலிருந்த பழக்கடை தீக்கிரையாகி முழுமையாக எரிந்து நாசமானது. சம்பவம் நடந்ததும் மக்கள் அச்சத்துடன் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு, பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீ பரவலை தடுத்தனர்.

அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் கடைகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானதால், வணிகர்களுக்கு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தீவிபத்தின் காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Post a Comment

Previous Post Next Post