தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் மனோரா அருகே கார் மோதி முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரழப்பு.
சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி,மனோராவை சேர்ந்த காத்தையன்(வயது.62) இவர் கிழக்கு கடற்கரை சாலையில் மனோரா நுழைவு வாயில் எதிரே உள்ள சாலையை சைக்கிளில் கடக்க முயன்ற போது கட்டுமாவடி நோக்கி சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மல்லிப்பட்டினம் சமுதாய நலமன்ற ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
உடலை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த சேதுபாவாசத்திரம் காவல்துறை அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை செய்து வருகின்றனர்.
Post a Comment