பட்டுக்கோட்டையிலிருந்து இடம்பெயரும் மாவட்ட கல்வி அலுவலகம்.
மாணவர்கள் ஆசிரியர்கள்
பெற்றோர்கள் பரிதவிப்பு..!!
சுமார் நூற்றுக்கு மேற்பட்ட உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளை கொண்டது பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம்.
பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் மாவட்ட கல்வி அலுவலகம் இயங்கி வருகிறது.
பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம் 1968 முதல் செயல்பட்டு வருகிறது.
அறந்தாங்கி முதல் வேதாரண்யம் வரை பரந்து விரிந்த இக்கல்வி மாவட்டம் புதிய வருவாய் மாவட்டங்கள் உருவாகும் போது தனித்தனி கல்வி மாவட்டங்களாக உருவாயின.
தொடர்ந்து பட்டுக்கோட்டை கல்வி மாவட்டமானது பட்டுக்கோட்டை நகராட்சி-ஒன்றியம், அதிரை நகராட்சி
மதுக்கூர் பேரூர்-ஒன்றியம் பேராவூரணி பேரூர்-ஒன்றியம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் பெருமகளூர் பேரூராட்சி ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது.
56 மேநிலைப்பள்ளிகளும் 52உயர்நிலைப்பள்ளிகளில் படிக்கின்ற மாணாக்கர்களின் எண்ணிக்கை 55118
பணியாற்றும் ஆசிரியர்களும் ஊழியர்களின் எண்ணிக்கை 2207.
தஞ்சையில் கடைக்கோடி ஊரான கட்டுமாவடியிலிருந்து உழைக்கும் கூலி தொழிலாளர் மக்களின் பிள்ளைகள், அவர்களுடைய பெற்றோர்கள் DEO வை பார்க்க தஞ்சைக்கு செல்ல வேண்டிய நிலை குறித்த ஆய்வு செய்ய தவறிவிட்ட தமிழக அரசு உடனடியாக உத்தரவை திரும்ப பெற வேண்டும்.
பாரம்பரியமான பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தை பட்டுக்கோட்டையிலேயே செயல்பட வேண்டும்.
தஞ்சை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக உள்ள மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் வாயிலாக, பட்டுக்கோட்டையிலேயே மாவட்ட கல்வி அலுவலகம் தொடர்வதற்கு பேராவூரணி, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்கள் முயற்சி எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் விருப்பமாக இருக்கிறது.
மக்களின் கோரிக்கையை ஏற்று நமது பகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் இதற்கான வழிவகையை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
பதிவு:- பட்டுக்கோட்டை யஹ்யா
Post a Comment