மல்லிப்பட்டினம் ஷாபி இமாம் தெரு இளைஞர்களால் நடத்தப்படும் முதலாம் ஆண்டு சிறுவர் சிறுமிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் வருகின்ற ஆகஸ்டு 29,30 ஆகிய தேதிகளில் ஷாபி இமாம் தெருவில் நடைபெற இருக்கிறது.
இதில் சிறுவர் சிறுமிகளுக்கான ஓட்டப்பந்தயம்,பிஸ்கட் கவ்வுதல், இசை நாற்காலி, நீர் நிரப்புதல்,லெமன் ஸ்பூன்,சாக்குப் போட்டி, பலூன் பிடித்தல்,கம்பை சுற்றி வருதல் இன்னும் பல விளையாட்டுகள் நடைபெற உள்ளன.
போட்டியில் பங்கேற்க 1-8 வகுப்புக்குள்ள மாணவர்கள் மட்டுமே,மேலும் வயது 13க்குள் இருக்க வேண்டும்.
இன்னொரு மகிழ்ச்சியான செய்தி என்னவெனில் பங்கெடுக்கும் அனைவருக்கும் பரிசுகளை கொடுக்கின்றனர்.

Post a Comment