அதிராம்பட்டினத்திற்கும் தரங்கம்பாடிக்கும் இடையே நவ-11 இரவு கரையைக் கடக்கிறது வங்கக்கடல் சலனம்...!


இன்று இரவுக்குள் காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வழுப்பெரும் வங்கக்கடல் சலனம்.

2022 நவம்பர் 11 ஆம் தேதி இரவு மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடிக்கும் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திற்கும் இடையே காரைக்காலுக்கு மிக அருகே நாகப்பட்டினத்தை மையமாக வைத்து கரையைக் கடக்கிறது வங்கக்கடல் சலனம். 

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வட கடலோர பகுதிகளில் சென்னை திருவள்ளூர் முதல் தஞ்சை கடலோர பகுதிகளில் நவம்பர் 11 மற்றும் 12-ஆம் தேதியன்று கனமழை பெய்யும்.

கடலோரத்தை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் நல்ல மழை எதிர்பார்க்கலாம் 

தென் தமிழகத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் ஆங்காங்கே மிதமான மழை பெய்யலாம்.

என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.



Post a Comment

Previous Post Next Post