மல்லிப்பட்டினம் அருகே உள்ள சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற விசைபடகில் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலை பயன்படுத்தியதால் மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை.
மல்லிப்பட்டினம் மீன்வள ஆய்வாளர் கெங்கேஸ்வரி,மீன்வள சார் ஆய்வாளர் சேதுபாவசத்திரம் ஆனந்த் மற்றும் அலுவலர்கள் சாகர்மித்ரா,அப்துல் நிவாஸ் கார்த்திகேயன்,ஜெயப்பிரதா ஆகியோர் கீழத்தோட்டம் கடற்கரையில் இருந்து புறப்பட்டு முத்துப்பேட்டையில் மீன்பிடி பகுதிக்கு ஆய்வுக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது இரண்டு விசைபடகுகள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடிவலைகளை பயன்படுத்தி மீன்பிடித்து கொண்டிருந்தனர்,அதிகாரிகளை கண்டதும் ஒரு விசைப்படகு சென்றுவிட்டது,சிக்கிய ஒரு விசைப்படகு மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தொடர்ந்து கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு விதிமீறும் படகு உரிமையாளர்கள் மீது துறைரீதியான நடவடிக்கைகள மேற்கொள்ளப்படும் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment