மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பது எப்படி.?

 


தமிழக அரசு மின்சார எண்ணுடன் ஆதாரை இணைக்க பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதற்காக பயனர்கள் எளிதில் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கும் வசதியை ஆன்லைனில் செய்துள்ளது. இதற்கு வசதியாக லிங்க் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், ஒன்றிற்கு மேற்பட்ட கணக்குகளுக்கு மேல் மின் இணைப்பு வைத்திருக்கும் பயனர்கள், ஒரே ஆதார் எண்ணை ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்பு எண்களுடன் இணைப்பதில் எந்த சிக்கலும் இல்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிற்க்கும் மேற்பட்ட மின் இணைப்பு எண் வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் ஒரே செல்போன் எண்ணை மட்டுமே கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டையை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க TANGEDCO சார்பில் சிறப்பு ஆன்லைன் லிங்க் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த இணையதள பக்கத்திற்கு https://adhar.tnebltd.org/adharupload/ சென்று ஆதாரை எளிதில் இணைக்கலாம்.

Post a Comment

Previous Post Next Post