இரும்பு தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி.!



 திருச்சிற்றம்பலம் அருகே உள்ள களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகவேலு (வயது56). விவசாயி. இவர் நேற்று முன்தினம் அதிகாலை திருச்சிற்றம்பலம் கடைவீதிக்கு சென்று விட்டு, தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது திருச்சிற்றம்பலம் நாடங்காடு பிரிவு சாலையில் அமைக்கப்பட்டிருந்த சாலையோர இரும்பு தடுப்பில் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் சண்முகவேலு தலை மற்றும் முகத்தில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சிற்றம்பலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி, பேராவூரணி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணை இதுகுறித்து சண்முகவேலுவின் மனைவி ராணி கொடுத்த புகாரின் பேரில் திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சண்முகவேலுவிற்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி விட்டது. விபத்தில் விவசாயி பலியான சம்பவம் அந்த பகுதியை சேர்ந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



Post a Comment

Previous Post Next Post