நாட்டின் முதலாவது கடற்பசு பாதுகாப்பகம் அமைப்பதற்கான வடிவமைப்பு, இறுதி செய்யப்பட்டு உள்ளதாக, வனத்துறை. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் அழிவின் விளிம்பில் இருக்கும் அரியவகை கடல் பசு இனத்தையும் அதன் வாழ்விடத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் கடல் பசு பாதுகாப்பு மையம் பட முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இது குறித்து வன அதிகாரிகள் கூறியதாவது கடல் பசுக்களின் வாழ்வு இடத்தை பாதுகாக்கும் பொருட்டெ புதிய காப்பகம் அமைக்கப்பட உள்ளது.உள்ளூர் மக்கள்,மீனவர்கள் பங்கேற்புடன் இந்த மையம் அமைக்கப்படும்.இதன்படி இந்த சிறப்புமையம் பட்டுக்கோட்டை அருகே மல்லிப்பட்டினத்தை அடுத்த மனோராவில் அமைய இருக்கிறது.448 சதுர கி.மீ ல் இந்த சிறப்புமையம் அமைக்கட உள்ளது.இதில் கடற்பசுக்கள் காட்சிக்கூடம்,அருங்காட்சியகம்,அறிவுசார் தகவல் மையம்,நூலகம் போன்ற வசதிகளும் அமைக்கப்படும்.

Post a Comment