மல்லிப்பட்டினம் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து.!

 



மல்லிப்பட்டினம் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து மல்லிப்பட்டினம் அருகே உள்ள ராஜமடம் பாலத்தில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக அதிராம்பட்டினத்தில் இருந்து மல்லிப்பட்டினம் நோக்கி வந்த மினி லாரி வாகனம் எதிரே வந்த காரின் மீது மோதியதில் நிலைப் தடுமாறி சாலையிலே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  விபத்துக்குள்ளாகி கவிந்த வாகனத்தை ஜேசிபி எந்திரத்தை கொண்டு தூக்கி சாலை சரி செய்யப்பட்டது. இதனால் சிறிது போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுவாகனங்கள் அணிவகுத்து சாலையில் நின்றன. பின்பு போக்குவரத்து சரி செய்யப்பட்டு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. விபத்தினால் ஓட்டுனர் சிறு காயங்களுடன் காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.





Post a Comment

Previous Post Next Post