நான் திருப்பி அடிச்சா உங்களால தாங்க முடியாது எச்சரிக்கை விடுத்த மு.க ஸ்டாலின்...

கரூர் மாவட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டையாக வைத்திருந்தவர் செந்தில் பாலாஜி அவர்கள் இவர் தமிழ்நாட்டில் அமைச்சரவை பட்டியலில் மின்சார துறை மற்றும் மதுவிலக்கு துறையின் அமைச்சராக இருக்கக்கூடியவர். இவரை நேற்றைய முன் தினம் நள்ளிரவில் அமலாக்கத்துறை கைது செய்ய முயற்சித்தபோது நெஞ்சுவலியின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இவர் அனுமதிக்கப்பட்டிருக்கிற  மருத்துவமனை முழுவதும் அமலாக்கத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
செந்தில் பாலாஜி அவர்களை அமலாக்கத்துறை கைது செய்ய முயற்சித்ததை கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் உள்ளிட்ட பிற கட்சிகளை சார்ந்தவர்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்
இந்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியை சீர்குலைப்பதற்காக ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்கு மாநில அரசை விமர்சிப்பதற்காகவும் இந்த நிகழ்வு திட்டமிட்டு செயல்பட்ட செயல் படுத்தப்பட்டதாக தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.என்னை யாரும் அடிக்க முடியாது... ஞாபகம் வச்சுக்கோங்க... "நான் திருப்பி அடிச்சா உங்களால தாங்க முடியாது " என்று கலைஞரின் பாணியில் மு க ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய அரசை மையப்படுத்தி எச்சரிக்கை விடுத்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

Post a Comment

Previous Post Next Post