100 நாள் வேலை திட்டத்தின் நிதியை தர மறுக்கும் ஒன்றிய பாசிச பாஜக அரசை கண்டித்து தஞ்சை தெற்கு மாவட்டம் சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றியம் சார்பில் சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.மு.கி.முத்துமாணிக்கம் தலைமையில் பூக்கொல்லை கடைவீதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் திஅசோக்குமார் முன்னிலையில் நடைபெற்றது.இந் நிகழ்வில் கழக பொதுக்குழு உறுப்பினர் தனபால் மற்றும் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் திரு.இராஜரெத்தினம்,தமிழ்நாடு மீனவர் நலவாரிய துணைத்தலைவர் தாஜூதீன்,மாவட்ட பிரதிநிதி ஹபீப் முகமது ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு 700 மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் இந்நாள் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள் கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.





Post a Comment