மல்லிப்பட்டினம்: அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியின் கணினி அறிவியல் துறையின் தலைவர் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பேராசிரியர் மல்லிப்பட்டினம் அப்துல் காதர் ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா வெகு விமரிசையாக நடந்தது.பேராசிரியர் அப்துல் காதர் குதிரை சாரட் வண்டியில் அமர வைக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு வந்து வாழ்த்தினர்.
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கலைக்கல்லூரியின் பேராசிரியராக 1988ல் பணியாற்ற தொடங்கிய அப்துல் காதர் அவர்கள் சுமார் 37 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றி பல இந்தியா,வெளிநாடுகளில் மிகச்சிறந்த உயரிய பொறுப்புகளில் உள்ள பல முன்னணி நிறுவனங்களில் பணிபுரிபவர்களை உருவாக்கியவர் என்றால் அது மிகையாகாது.பேராசிரியர் அப்துல் காதர் என்றால் அத்தனை பேருக்கும் அவ்வளவு பரிட்சயம்.
அதே போல இவர் எளிமையுடன்,அனைவருடனும் அன்பாகவும்,புன்முறுவலுடன் பழக கூடியவர், கல்லூரி பேராசிரியர் முதல் மாணவர்கள் வரை அனைவரிடத்திலும் சகஜமாக பழக கூடியவர்.இவரை எவ்வாறு சமூகத்தில் சிறந்த ஆசிரியராக உருவாக்கினார்களோ அதே போல அவருடைய மூத்த மகன் ஜியாவூர் ரஹ்மான் பேர் சொல்லும் மருத்துவராக உருவாக்கி தஞ்சை காமாட்சி மருத்துவமனையில் பணிபுரிகிறார்,மருத்துவர் ஜியாவூர் ரஹ்மானும் அவர்களின் பாட்டனாரை போல,தந்தையை போல கொரோனா காலங்களில் இலவச மருத்துவ சிகிச்சைகளை வழங்கி தமிழகம் முழுவதும் பேசப்பட்டவர்.
இன்று நடைபெறற பிரிவு உபசார விழாவில் உடன் பணிபுரிந்த கல்லூரி பேராசிரியர்கள்,ஆசிரியர்கள், உறவினர்கள் என பலரும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
பேராசிரியர் அப்துல் காதர் அவர்களின் அடுத்த இன்னிங்க்ஸ் சிறப்பாக இருக்க மல்லி நியூஸ் வாழ்த்துக்கிறது.
Post a Comment