அமீரகத்தில் தஞ்சை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த அதிரை இளைஞருக்கு எஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் வாழ்த்து..!

 


தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த KSM பகுருதீன் மகன் இர்ஃபான் அலி என்பவர்

அமீரகத்தில் (UAE) சமீபத்தில் நடந்த ஒரு பிரபல கைப்பந்து அணிக்கு ஏலம் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, கடந்த 18,19, 20.03.2025 ஆகிய தினங்களில் அமீரகத்தில் (UAE) பல்வேறு அணிகள் கலந்து HATTA TOURNAMENT என்ற கைப்பந்து போட்டியில் ONLY FRESH என்ற கைப்பந்து கழகத்திற்கு சிறப்பாக விளையாடி முதல் பரிசாக இந்திய ரூபாய் மதிப்பில் 8 இலட்சம் பரிசுத் தொகையும் மற்றும் சுழற் கோப்பையும் பெற்று நம் பகுதிக்கு பெருமை சேர்த்து உள்ளார்.

மேலும் கடல் கடந்து நம் பகுதிக்கு பெருமை சேர்த்து வரும் இளையர் இர்ஃபான் அலி அவர்களுக்கு SDPI கட்சி சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன் என எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post