எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக வக்ஃபு திருத்த சட்ட மசோதாவை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட பொது செயலாளர் முஹம்மது புஹாரி தலைமையில் நடைபெற்றது.
தஞ்சை தெற்கு மாவட்ட துணைத்தலைவர் அஹமது அஸ்லம் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு அழைப்பாளராக முத்துப்பேட்டை நகர தலைவர் வழக்கறிஞர் ராஜ் முஹம்மது கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து அதிரை நகர செயலாளர் பாரிஸ் அஹமது கண்டன கோஷம் எழுப்பினார். இவ்வார்ப்பாட்டத்திற்கு அதிரை நகர தலைவர் அஹமது இப்ராஹிம், பட்டுக்கோட்டை கிளைத் தலைவர் பீர் முஹம்மது, கிளை செயலாளர் அந்துவான், சேதுபாவா சத்திரம் ஒன்றிய துணைத்தலைவர் அன்வர், செயலாளர் வஹி முஹம்மது மன்சூர், சம்பை கிளை தலைவர் முத்து மறைக்கான், அதிரை நகர துணைத்தலைவர் அக்பர் அலி, நகர செயற்குழு உறுப்பினர் அப்துல் ரகுமான், அதிரை கிளை தலைவர் அபுல் ஹசன், மல்லிப்பட்டினம் ஜிபி கமிட்டி தலைவர் ஜவாஹிர், அனைத்து தொகுதி/ஒன்றிய/நகர/கிளை செயல் வீரர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இறுதியாக தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பு பொது செயலாளர் அசாருதீன் நன்றியுரை நிகழ்த்தினார்.



Post a Comment