நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு தமிழகத்தில் கோடை கால வெப்பச்சலன இடி மழை தீவிரமடையும்.
இந்த சுற்று மழையானது மேற்கு மாவட்டங்கள், மேற்கு உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், தென் உள் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் மழைக்கும் ஆங்காங்கே கனமழைக்கும் வாய்ப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மத்திய உள் மாவட்டங்களிலும் பெரும்பாலான பகுதிகளில் இடி மழைக்கும் ஆங்காங்கே ஆங்காங்கே கனமழைக்கும் வாய்ப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
வட கடலோர மாவட்டங்கள் மற்றும் வட உள் மாவட்டங்களில் ஆங்காங்கே இடிமழை வாய்ப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கக்கடலில் தமிழகம் அருகே அடுத்த வாரம் ஒரு காற்று சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது இதன் நகர்வை பொறுத்து தமிழகத்தில் மழையின் தீவிரம் மாறுபடும்.

Post a Comment