துபாய் மெட்ரோவில் இணையவுள்ள 50 புதிய ரயில்கள் !

துபையின் முக்கிய போக்குவரத்தாக திகழ்வது மெட்ரோ ரயில் சேவையாகும். இந்த மெட்ரோ சேவையை மேம்படுத்துவதற்கான பல்வேறு முன்னெடுப்புக்களை துபை போக்குவரத்து துறை செய்து வருகிறது.

2020 ஆம் ஆண்டு துபையில் மாபெரும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி துபை எக்ஸ்போ 2020 என்ற பெயரில் நடைபெறவுள்ளதையொட்டி ஏற்கனவே சேவை வழங்கி வரும் ரெட் லைன் மற்றும் கிரீன் லைன் தடங்களில் 35 புதிய ரயில்களையும், புதிதாக கட்டப்பட்டு வரும் எக்ஸ்போ 2020 தடத்தில் 15 ரயில்களையும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

தற்போது பிரான்ஸ் நாட்டில் கட்டப்பட்டு வரும் புதிய மெட்ரோ ரயில்கள் புறத்தோற்றத்தில் ஒன்றாகத் தெரிந்தாலும் உட்புற கட்டமைப்பில் பல்வேறு மாறுதல்களை கொண்டிருக்கும். புதிய ரயிலில் கூடுதல் இருக்கைகள், லக்கேஜ் வசதி, நின்று பயணிப்பவர்களுக்கான தாராள இடவசதி மற்றும் பிடிமானங்கள், விளக்குகள், அறிவிப்புத் திரைகள் என்பன போன்றவற்றுடன் முன்புறப் பெட்டி கோல்டு கிளாஸ் பயணிகளுக்காகவும், கடைசிப் பெட்டி பெண்களுக்காகவும் ஓதுக்கப்படவுள்ளன.

Post a Comment

Previous Post Next Post