தொடர்ந்து மூன்றாவது நாளாக கிழக்கு கடற்கரை சாலையில் கருவேல மரங்கள் அகற்றம்..!

 



அதிராம்பட்டினம் முதல் தொண்டி வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் சாலையின் இருபுறங்களிலும் கருவேல மரச் செடிகள் படர்ந்து காணப்படுவதால் அதிகமான வாகன விபத்துக்கள் நேர்ந்த வண்ணம் இருந்தன.

இதனை அகற்றி தருமாறு பல்வேறு தரப்பிலும் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சி,எஸ்டிபிஐ,தமுமுக,காங்கிரஸ்,தவ்ஹீத் ஜமாஅத், வாழ்வுரிமை கட்சி இன்னும் பலரும் கோரிக்கை வைத்திருந்தனர்.

அதன் எதிரொலியாக பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் உத்தரவின் பேரில் தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவி கொண்டு அதிராம்பட்டினம் முதல் சம்பைபட்டிணம் வரை சாலையின் இருபுறங்களிலும் கருவேல மரங்கள்,புதர்களை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றி  வருகின்றனர்.

இதன்காரணமாக வாகன ஓட்டிகள்,சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.




3 Comments

  1. TNTJ முயற்சி செய்தது தெரியும் , மற்றவர்கள் யாரும் கோரிக்கை வைத்த மாதிரி தெரியலையே...

    ReplyDelete
  2. Sariyana kelvi tntj than aarpattam arivichanga

    ReplyDelete
  3. news olunga potuga tambi tappana news potatinga

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post