மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் அதிரை வீரர் பங்கேற்பு (படங்கள்)


மல்லிப்பட்டினம் அருகில் உள்ள அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர்துப்பாக்கி  சுடும் போட்டிகளில் ஆர்வமாக கலந்துகொண்டு வருகிறார்.
, ஜூலை 16
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் சேக் முகமது. இவரது மகன் வஜீர் அலி (வயது 43). விளையாட்டு வீரரான இவர் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் துப்பாக்கி சுடும் போட்டிகளில் ஆர்வமாக கலந்துகொண்டு வருகிறார்.

இந்நிலையில், தமிழ்நாடு ரைபிள் கிளப் சார்பில் 43-வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி சென்னை காவலர் பயிற்சி மையத்தில் கடந்த 12 ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 610 வீரர்கள் கலந்துகொண்டனர்.

இதில் 10 மீட்டர் தூரம் குறிபார்த்து சுடும் போட்டியில் அதிரை வஜீர் அலி கலந்து கொண்டு விளையாடி வருகிறார். மாநில அளவில் நடைபெறும் துப்பாக்கி சுடும் போட்டியில் அதிரை வீரர் ஒருவர் இரண்டாவது முறையாக கலந்துகொண்டு விளையாடி வருகிறார்.

இதில் 10 மீட்டர் மற்றும் 50 மீட்டர் தூரம் குறிபார்த்து சுடுவது உள்ளிட்ட போட்டிகளில் ஏர்பிஸ்டல், ரைபிள், பிஸ்டல் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு கோவையில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் வஜீர் அலி கலந்துகொண்டு விளையாடியது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அதிரை வஜீர் அலி கூறுகையில்;
சிறு வயது முதல் துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் அதிக ஆர்வம் கொண்டுள்ளேன். பல்வேறு பகுதிகளில் நடக்கும் போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடி வருகிறேன். அதிரையின் முதல் வீரர் என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.

துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் சாதனை நிகழ்த்தும் வீரர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள், பரிசுகள் பெரும் வாய்ப்பு உள்ளது. இப்போட்டிகளில் விளையாட அதிக ஆர்வம் கொண்ட அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தயாராக உள்ளேன். அவர்களுக்கு வெற்றியைப் பெரும் நுணுக்கங்களை கற்றுக்கொடுப்பேன். துப்பாக்கி சுடுவதில் சிறந்த வீரர்களை உருவாக்குவதே எனது லட்சியம். அதுவும் நமது பகுதியிலிருந்து அதிக சாதனையாளர்கள் உருவாக வேண்டும். இவர்கள் நிகழ்த்தும் சாதனைகள் நமது பகுதிக்கும், நமது நாட்டிற்கும் பெருமையைத் தேடித் தர வேண்டும்' என்றார்.

Post a Comment

Previous Post Next Post