அதிராம்பட்டினத்தில் மினி மாரத்தான் ஓட்டப்போட்டி ~ முன்பதிவுக்கு அழைப்பு(மல்லி நியூஸ்)

December 17, 2017

அதிராம்பட்டினத்தில் மினி மாரத்தான் ஓட்டப்போட்டி ~ முன்பதிவுக்கு அழைப்பு !

அதிராம்பட்டினம், டிச.17
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு கடந்த டிச.13 ந் தேதி அதிராம்பட்டினத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு அவ்வமைப்பின் மாவட்டத் தலைவர் ஏ.ஹாஜா அலாவுதீன் தலைமை வகித்தார். இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தேசிய பிரச்சாரமான (healthy people healthy nation) ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில், அதிராம்பட்டினத்தில் மாவட்ட அளவிலான மாரத்தான் ஓட்டப்போட்டி நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் அவ்வமைப்பின் நிர்வாகிகள் - உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

அதன்படி, மாரத்தான் ஓட்டப்போட்டி அதிராம்பட்டினத்தில் எதிர்வரும் 30-12-2017 சனிக்கிழமை தக்வா பள்ளிவாசல் முக்கத்திலிருந்து தொடங்கி 5 கிலோ மீட்டர் தூரம் ஈஸ்ட் கோஸ்ட் சாலை வழியாக மீண்டும் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நிறைவு பெரும். இதில் விளையாட்டு வீரர்களும், பொதுமக்களும், மாணவர்களும் கலந்து கொள்ளுமாறு அவ்வமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post