மல்லிப்பட்டினம் அரசு பள்ளியில் ஆசிரியைக்கு கத்தி குத்து - SDPI கட்சி கடும் கண்டனம்...!



மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப்பள்ளி பயிற்சி ஆசிரியையாக ரமனி என்ற ஆசிரியை பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் சின்னமனையை சேர்ந்த மதன் என்பவன் பள்ளிக்கு உள்ளே புகுந்து ஆசிரியர் மானவர்கள் மத்தியில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு ஆசிரியையின் கழுத்து மற்றும் இடுப்பில் குத்தியுள்ளான்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் கூச்சலிட்டு குத்தியவனை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இரத்த வெளத்தில் உயிருக்கு போராடி கொண்டு இருந்த  ஆசிரியை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வழியிலே ஆசிரியை இறந்துவிட்டார்.

கத்தியால் குத்திய மதனை கைது செய்து சேதுபாவாசத்திரம் காவல்நிலையத்தில் கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

உயிரிழந்த ஆசிரியர் க்கு SDPI கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறது.

இச்சம்பவம் இனி நிகழமால் இருக்க இரும்புகரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என SDPI கட்சி கேட்டு கொள்கிறது.


J.ஜவாஹிர்.MBA

G.P கமிட்டி தலைவர் (SDPI கட்சி)

மல்லிபட்டினம்

Post a Comment

Previous Post Next Post