மல்லிப்பட்டினம் ரேசன் கடையில் அதிகாரிகள் ஆய்வு.!

 



தஞ்சை மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மல்லிப்பட்டினம் ரேசன் கடையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழக வாழ்வுரிமை கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் பஷீர் அகமது மல்லிப்பட்டினம் ரேசன் கடையில் பொருட்கள் கள்ள சந்தையில் விற்கப்படுவதாகவும்,பொருட்கள் இல்லை என கூறி பொதுமக்கள் அலைகழிக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டி மல்லி நியூஸ் வாயிலாக செய்தி வெளியிடப்பட்டது.

இந்நிலையில் மல்லிப்பட்டினம் ரேசன் கடையில் அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டனர்.மேலும் பொதிமக்களிடம் குறைகளையும்,புகார்களையும் கேட்டு பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுப்பதாகவும் தெரிவித்தனர். 




Post a Comment

Previous Post Next Post