கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் இஸ்லாமிய இளைஞர்கள் நடத்திவரும் தர்மம் செய்வோம் குழுமம் சார்பாக ஏழை மக்களுக்காக இலவச ஆடையகம் துவங்கப்பட்டுள்ளது. அங்கு வரும் நல்ல நிலையிலுள்ள உடுத்திய ஆடைகளை துவைத்து சலவை செய்து ஏழை மக்களுக்காக வைக்கப்படுகிறது. சிலர் புதிய ஆடைகளையும் கொடுத்து விட்டு செல்கின்றனர்.
பொது மக்கள் தங்களுக்கு உபயோகமற்றதாகக் கருதும் நல்ல துணிமணிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், உணவுப் பொருட்களை இங்கே வைத்துவிடலாம். அவைகளை தேவையுள்ளவர்கள் நேரில் சென்று தங்களுக்கு உபயோகப்படும் என நினைக்கும் மக்கள் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம் எனும் நோக்கத்தோடு இந்த ஆடையகம் திறக்கப்பட்டுள்ளது.
இங்கு ஆடை மட்டுமில்லாது காலணிகள், இன்னும் பிற பொருட்களும் ஏழைகளுக்காக வைக்கப்படுகிறது. தினமும் 5 முதல் 10 நபர்கள் வரை வந்து ஆடைகளை எடுத்து மகிழ்வாக செல்கின்றனர். இதனை நமதூரிலும் செய்தால் ஏழைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
Post a Comment