அதிராம்பட்டினத்தில் CBD இரத்ததான சேவை அமைப்பின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்
அதிராம்பட்டினம், டிச.15
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் கிரசண்ட் பிளட் டோனர்ஸ் ( CBD ) இரத்த தான சேவை அமைப்பின் சார்பில், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் இன்று வெள்ளிக்கிழமை அதிராம்பட்டினம் பெரிய ஜும்மா பள்ளிவாசல் அருகில் நடைபெற்றது.
முகாமிற்கு அவ்வமைப்பின், மாவட்ட துணைத் தலைவர் அக்லன் கலீஃபா தலைமை வகித்தார். அவ்வமைப்பின், அதிரை பேரூர் தலைவர் இப்ராஹிம் அலி முன்னிலை வகித்தார்.
இம்முகாமில் சுமார் 100க்கும் மேற்பட்ட தன்னார்வல இரத்த தான கொடையாளர்கள் தங்களது பெயர், இரத்த வகை, தொலைபேசி எண், முகவரி போன்ற தகவல்களை அளித்து CBD இரத்த தான சேவை அமைப்பில் இணைந்து கொண்டனர்.
இதில், அவ்வமைப்பின் செயற்குழு உறுப்பினர்கள் சமீர் அலி, அப்ரித், ஃபாய்ஸ் அஹமது மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதிராம்பட்டினத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கப்பட்டு, இதன் மூலம் அவசர தேவைக்கு இரத்த தானம், அவசரகால மருத்துவ உதவி, பேரிடர்கால மீட்பு உள்ளிட்ட பல்வேறு சமூகநலப் பணிகளில் இவ்வைமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அமைப்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தன்னார்வல இளைஞர்களால் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.
Post a Comment