முஸ்லிம்களின் அடுத்த மார்க்க சட்டத்திட்டத்தில் கை வைத்த மோடி

பிரதமர் மோடி மாதந்தோறும் ‘மன்கி பாத்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இதன்படி, நேற்று அவர் ஆற்றிய உரையில் கூறியதாவது, முஸ்லிம் பெண்கள் ஆண்களின் பாதுகாப்புடன்தான் ஹஜ் புனித யாத்திரை செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு பல ஆண்டுகளாக இருக்கிறது. இந்த கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கியுள்ளது. அதன்படி, 45 வயதுக்கு மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் இனிமேல் ஆண்கள் பாதுகாப்பின்றி ஹஜ் யாத்திரைக்கு தனியாக செல்லலாம். என தெரிவித்துள்ளார். மஹரமான ஆண் துணையின்றி பெண் ஹஜ்ஜுக்கு செல்லக்கூடாது என்ற நிலை உள்ளபோது, பிரதமர் மோடி இதன் மூலம், இஸ்லாமியர்களின் அடுத்த சட்டத்தில் மோடி கைவைத்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post