ரபேல் போர் விமான ஊழலை கண்டித்து நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது காங்கிரஸ் கட்சி : அனைவரையும் அழைக்கிறார் A. நூருல் அமீன்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டின் அறிவிப்பின் படி ரஃபேல் போர் விமான ஊழலை கண்டித்து கண்டன பேரணி - ஆர்பாட்டம் செப் 16 நாளை  நடைபெறுகிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர்  தலைமையில், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் திரு சஞ்ஜய் தத் அவர்களுடன் இனைந்து  கண்டன ஆர்பாட்டம் நடைபெறும். இதில் திரு .முகுல் வாஸ்னிக் அவர்கள் கண்டன பேருரை ஆற்றவுள்ளார்.

16.9.2018 ஞாயிறு  நாளை

காலை 10 மணி - தஞ்சாவூர்

கண்டன ஆர்பாட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் முன்னிலை வகிப்பார்கள்.  தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் திரு. KR ராமசாமி உள்ளிட்ட தமிழக காங்கிரஸ் முன்னனி தலைவர்கள் உடன் பங்கேற்பார்கள். தஞ்சை மற்றும் திருச்சியில்  புதுவை மாநில முதல்வர் மாண்புமிகு திரு.நாராயணசாமி அவர்களும் பங்கேற்க உள்ளார்.

நடைபெற உள்ள ஆர்பாட்டத்திற்கு மாநில நிர்வாகிகள், நாடாளுமன்ற,  சட்டமன்ற முன்னாள், இந்நாள் உறுப்பினர்கள், மாவட்ட , வட்டார, நகரத்திற்கு உட்பட்ட நிர்வாக பெருமக்கள், முன்னனி அமைப்புகள், இதர துறைகளின் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், செயல் வீரர்கள், பொதுமக்களுடன் இணைந்து ஆர்பாட்டத்தில் பெருமளவில் கலந்து கொண்டு மோடியின் ஊழலை மக்கள் மன்றத்தில் தோலுறித்து காட்ட அணிதிரள்வோம், ஆர்பாட்டத்தை வெற்றி பெறச் செய்வோம். தலைவர் ராகுல் காந்தி பிரதமர் ஆகும் வரை ஒற்றுமையுடன் இணைந்து போராடுவோம், வெற்றி பெறுவோம்,  

என அனைவரையும் அழைக்கிறது 

       தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி,

        A.நூருல் அமீன்,
         RGPRS ,
        சேதுபாவசத்திரம் வட்டார ஒருங்கிணைப்பாளர்,
          தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

Post a Comment

Previous Post Next Post