மல்லிப்பட்டினம் கடற்கரையின் தற்போதைய நிலைமை ...!!!

கஜா புயலின் பாதிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பாமல் இருக்கும்  நிலையில் அடுத்த " பெய்ட்டி "என்னும் புயல் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதன் எதிரொலியாக அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, ராஜாமடம் மற்றும் மல்லிப்பட்டினம் ஆகிய பகுதிகளில் கடற்கரை உள்வாங்கியதாக சற்றுமுன் சில தொலைக்காட்சிகளில் செய்திகளும் ஒளிபரப்பப்பட்டது தற்போது மல்லிப்பட்டினத்தில் 3 மீட்டர் கடல் உள்வாங்கி உள்ளதாக தகவல் வந்துள்ளது. மல்லிப்பட்டினம் பகுதி மக்கள் புயல் காரணமாக அச்சத்தில் உள்ளனர்.


இது குறித்து அதிரை அல்அமீன் நிவாரண குழு சார்பாக வானிலை ஆர்வலர் செல்வகுமார் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது இது ஒரு சாதாரண நிகழ்வு என்றும் இதற்கும் பெய்ட்டி புயலுக்கும்  சம்பந்தம் இல்லை என்றும், அது சென்னை டு ஆந்திராவில் கரையை கடக்கவுள்ளது என்றும், இந்நிகழ்வு வழக்கம் போல் மாறிவிடும் என்றும் கூறியுள்ளார்.


புயல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை மக்கள் எந்த ஒரு வதந்தியையும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மல்லிப்பட்டினம், சின்னமனை போன்ற கடற்கரை பகுதிகளில் இருந்து, நமது செய்தியாளர்கள் உடனுக்குடன் தகவல் வழங்கி கொண்டிருக்கின்றார்கள்.


புயல் சம்பந்தமான செய்திகளை தெரிந்துகொள்ள உடனுக்குடன் இணைந்திருங்கள் மல்லி நியூஸ் உடன் ...

Post a Comment

Previous Post Next Post